

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பிரேமா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் உதயகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சரோஜா, பொருளாளர் மனோன்மணி முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து ஆட்சியர் அலுவலகம் அருகே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.