

செங்கல்பட்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் முகாம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் செங்கல்பட்டு நகரில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் இன்று (ஜன. 30) காலை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதில் 8, 10 மற்றும் 12-ம்வகுப்பு, பட்டப் படிப்பு, ஐடிஐ,டிப்ளமா உள்ளிட்ட கல்வித்தகுதி உடைய நபர்கள் பங்கேற்கலாம். மேலும் அசல் கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும் எனமாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கரோனா முன்னெச்சரிகை நடவடிக்கையாக https//www.tnprivatejobs.tn.gov.in. என்ற இணையதளத்தில் முன்பதிவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.