

தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.ஆர்.தர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கி மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வரு கின்றனர். இதற்கு தமிழக அரசின் சரியான திட்டமிடலும், வழிகாட்டலுமே காரணம். இதை தனியார் பள்ளி நிர்வாகங்கள் 100 சதவீதம் சரியாக செயல்படுத்தி வருவதால், கரோனா தொற்றுக்கு யாரும் ஆளாகவில்லை.
இதேபோல, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளையும் ஷிப்ட் முறையிலாவது உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களுக்கு அறி விக்கப்பட்டுள்ள பாடக் குறைப்பு போதுமானது அல்ல. மத்திய அரசு அறிவித்துள்ள சிபிஎஸ்இ-க்கான பாடக்குறைப்பு டன் ஒப்பீடு செய்து குறைப்பது, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமானது. கரோனா பரவல் காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் மூடிக் கிடப்பதால், பள்ளிகளுக்கான உள்ளாட்சி வரிகளையும், பள்ளிப் பேருந்துகளுக்கான வாகன வரியையும் தமிழக அரசு முழுமை யாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.