

திருச்சியில் இருந்து ஆறுமுகநேரி வரை நடைபெற்ற புறா பந்தயத்தில், 300 கி.மீ. தொலைவை 3 மணி 33 நிமிடத்தில் கடந்து வந்த புறாவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி பாரதி நகர் ஸ்டார்பந்தய புறா கிளப் சார்பில், திருச்சியில் இருந்து ஆறுமுகனேரிக்கு சுமார் 300 கி.மீ. (வான்வெளி தூரம்)தொலைவு புறாப் பந்தயம் நடைபெற்றது.
சுமார் 70 புறாக்கள் கலந்துகொண்டன. ஆறுமுநேரி பாரதிநகர் நாராயணனின் புறா பந்தய தூரத்தை, 3 மணி 33 நிமிடங்களில் கடந்து வந்து முதலிடம் பெற்றது.
3 மணி 35 நிமிடத்தில் பறந்து வந்த காயல்பட்டினம் காட்டுத்தைக்கா தெரு அப்துல் காதர் புறா இரண்டாமிடத்தை பிடித்தது.
அவரின் மற்றொரு புறா அடுத்து வந்து மூன்றாவது இடத்தை பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்டார் பந்தய புறா கிளப் தலைவர் பி.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.