Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM

குடியரசு தினத்தை முன்னிட்டு குமரி கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள், தண்டவாளங் களில் போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். ரயில்களில் வரும் பார்சல்கள் மற்றும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் குமரி கடல் வழியாக யாரும் ஊடுருவாமல் இருக்கும் வகையில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தை தவிர பிற பகுதியில் இருந்து கடலுக்குள் வரும் படகுகளில் மெரைன் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதுபோல் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரையிலான சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை துல்லியமாக கண்காணிக்க எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தர விட்டுள்ளார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உட்பட மாவட்டத் தின் முக்கிய பகுதி களில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகத் துக்கு இடமாக வரும் புதிய நபர்கள் குறித்து உடனடி யாக போலீஸாருக்கு தகவல் கொடுக்குமாறு விடுதி உரிமையாளர்களிடம் போலீஸார் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x