கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published on

திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் ஊராட்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தஞ்சாவூர் மக்கள்தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம், கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மன்னார்குடி ஒன்றிய குழுத் தலைவர் சேரன்குளம் மனோகரன் தலைமை வகித்தார். கள விளம்பர துறை அலுவலர் ஆனந்தபிரபு வரவேற்றார். இதில், கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை, தூய்மை பணி விழிப்புணர்வு குறித்து பெண்கள் கோலமிட்டிருந்தனர். விழிப்புணர்வு பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in