பாரம்பரியத்தை பறைசாற்றிய நாட்டரசன்கோட்டை செவ்வாய் பொங்கல் ஒரே சமயத்தில் 917 பேர் பொங்கல் வைத்தனர்

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் விழாவில் பொங்கல் வைத்த பெண்கள்.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் விழாவில் பொங்கல் வைத்த பெண்கள்.
Updated on
1 min read

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நகரத்தாரின் பாரம் பரிய செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒரே சமயத்தில் 917 பேர் பொங்கல் வைத்தனர்.

நாட்டரசன்கோட்டைப் பகுதியில் அதிகளவில் நகரத்தார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டு தோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து முதல் செவ் வாயன்று செவ்வாய் பொங்கல் கொண்டாடுகின்றனர்.

இதற்காக திருமணம் முடிந்த நகரத்தாரின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாகக் கணக்கிடுவர். அவர்களின் பெயரைச் சீட்டில் எழுதி வெள்ளிப் பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். முதல் சீட்டில் வருவோர் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக முதல் பானையில் பொங்கல் வைப்பர்.

அதன்படி நேற்று மாலை நடந்த பொங்கல் விழாவில் முதல் சீட்டில் தேர்வான சொக்கலிங்கம் குடும்பத்தினர் மண் பானையில் பொங்கல் வைத்தனர். அதைத் தொடர்ந்து 917 நகரத்தார் குடும்பத்தினர் வெண்கலம், சில் வர் பானைகளில் பொங்கல் வைத் தனர். மேலும் மற்ற சமூகத்தினரும் அவர்களுக்கு அருகிலேயே தனி வரிசையில் பொங்கல் வைத் தனர். அனைவரும் வெண் பொங் கல்தான் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும், இந்த விழாவில் உற வினர்கள் குசலம் விசாரித்து வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து இரவு முழுவதும் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பங்கேற்கும் இவ்விழாவில், கரோனா காரணமாக இந்தாண்டு யாரும் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து நாட்டரசன் கோட் டை நகரத்தார் கூறியதாவது: இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 400 புள்ளிகள்தான் இருந்தன. தற்போது 900-க்கு மேல் வந்துவிட்டது. இதனால் பொங்கல் வைக்கவே இடம் போதாத அளவுக்குக் கூட் டம் வந்துவிட்டது.

எங்களில் பலர் வெளியூர், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் எந்த விழாவுக்கு வராவிட்டாலும், செவ்வாய் பொங் கலுக்கு வந்துவிடுவர். இந்த விழா உறவினர்களை ஒன்று சேர்க்கும் விழாவாகவும் இருக்கிறது, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in