செஞ்சியில் இன்று குறிஞ்சி விழா

செஞ்சியில் இன்று குறிஞ்சி விழா
Updated on
1 min read

நம் மரபு, பண்பாட்டு விழு மியங்களை மீட்டெடுத்து மேடையேற்றும் விதமாக செஞ்சியில் குறிஞ்சி விழா இன்று நடைபெறு கிறது. 9-ம் ஆண்டாக நடைபெறும் விழாவில், செஞ்சி, கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை இவ்விழா நடைபெறும். ”மூவா மருந்து” என்ற தலைப்பில் தனிப்பொழிவாக கதை சொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை உரையாற்றுகிறார். தொடர்ந்து களரிக் கூட்டாக திருவண்ணாமலை துறிஞ்சை ஜமா வழங்கும் பெரிய மேளம், நாட்டுப்புற கலைக் கதம்பமாக கலை கிராமம் விருது பெற்ற நல்லாண்பிள்ளை பெற்றாள் மகளிர் குழு வழங்கும் கும்மி- கோலாட்டம், தெம்மாங்குப்பாட்டாக பேராசிரி யர் செந்தில் வேலன், கலவைஇரா .பூபாலன், செஞ்சி அ.கமலக் கண்ணன், தெருக்கூத்தாக கீதாஞ் சலி நாடக மன்றம் வழங்கும் இரணியன் மற்றும் கவிச்சரமாக கவிஞர்களும் கவிதைகளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இவ்விழாவை துரை. திரு நாவுக்கரசு, ஜெ.ராதாகிருஷ்ணன், செந்தில் பாலா, செஞ்சி தமிழினியன், சு.உதயகுமார், மு.தண்டபாணி ஆகியோர் ஒருங்கிணைக் கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இவ்விழா நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in