பழைய பொருளை எரித்தால் அபராதம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பழைய பொருளை எரித்தால் அபராதம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published on

போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பொருட்களை எரித்தால் அபராதம் விதிக்கப்படும், என நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாமக்கல் நகரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் இல்லங்களில் ஏற்படும் குப்பைகளை மக்கும் வகை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். பொங்கலுக்கு முன்தினமான இன்று (13-ம் தேதி) போகிப்பண்டிகையன்று பொதுமக்கள் பழைய குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

மீறி தீ வைப்பவர்களை கண்டுபிடித்தால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் படி ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் புகையில்லாத போகிப் பண்டிகை கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in