விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற முன்வர வேண்டும் மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற முன்வர வேண்டும்  மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற முன்வர வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தாமலும், மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளுடைய கருத்துகளை கேட்காமலும் நிறைவேற்றியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டம் குறித்தும், போராட்டம் குறித்தும் தொடரப்பட்ட 2 வழக்குகளை ஒன்றாக விசாரித்து, போராட்டம் குறித்த முதல்கட்ட தீர்ப்பில், அரசியலமைப்பு சட்டப்படி விவசா யிகள் போராடுவதற்கு உரிமை இருக்கிறது என குறிப்பிட்டு விவசாயிகள் போராட்டம் தொடர அனுமதி அளித்திருக்கிறது.

2-வது கட்ட தீர்ப்பில், வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு நீதிமன்றம் கூறிய ஆலோசனையை ஏற்க மறுத்தும், சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான குழு உறுப் பினர்களை பரிந்துரை செய்வ தற்கும் மவுனம் காக்கும் மத்திய அரசுக்கு பதிலடி தரும்விதமாக, புதிய வேளாண் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஆய்வுக்குழு உறுப்பினர்களையும் நியமனம் செய்துள்ளது.

இக்குழு மாநில அரசுகள், விவசாயிகள் கருத்தறிந்து, சட்டத்தில் இருக்கிற பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கும். அதன் அடிப் படையில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் என அறிவித் திருப்பது வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.

மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல், உடனடியாக வேளாண் சட்டத்தை திரும்பப் பெற முன்வர வேண்டும். இந்த நடவடிக்கைதான் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க உதவிகரமாக அமையும் என அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in