Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

அம்பகரத்தூர் குறுக்குச் சாலையை சீரமைக்காததை கண்டித்து மழைநீரில் நின்று பொதுமக்கள் மறியல்

அம்பகரத்தூர் குறுக்குச் சாலையை சீரமைக்காததை கண்டித்து, மழைநீரில் நின்றபடி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேஷ மூலை ஊராட்சியில் இருந்து விழிதியூர் வழியாக பூந்தோட்டம்- திருநள் ளாறு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. சேஷமூலை, சியாத்த மங்கை, விழிதியூர், கணபதிபுரம், மானாம்பேட்டை, விஸ்வநாதபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, விவசா யிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்து செல்வ தற்கும் இந்த சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பூந்தோட்டம்- திருநள்ளாறு சாலையில், விஸ்வ நாதபுரம்- விழிதியூர் இடையே உள்ள அம்பகரத்தூர் குறுக்குச் சாலை இணையும் இடத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது.

மேலும், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில் குளம்போல மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்ப வர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் சாலை சீரமைக் கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விஸ்வ நாதபுரம்- விழிதியூர் இடையே உள்ள அம்பகரத்தூர் குறுக்குச் சாலை இணையும் இடத்தில் தேங்கியுள்ள மழைநீரில் நின்றபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு, வருவாய் ஆய்வாளர் பூங்குழலி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், திட்டச்சேரி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத் தினர். பின்னர், பொக்லைன் மூலம் சாலையில் வடிகால் தோண் டப்பட்டு, தேங்கியிருந்த மழைநீர் வடியவைக்கப்பட்டது. மேலும், மழை நின்றதும் உடனடியாக புதிய சாலை அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

காரைக்காலில்...

காரைக்கால் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விழிதியூர் கிராமத்தையொட்டி தமிழகப் பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றது.

6 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் அதிக அளவு நீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின் றனர். எனவே, சாலையை உடன டியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த நிரவி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x