அதிமுக தலைமையை பாஜக ஏற்கும்:நடிகர் ராதாரவி நம்பிக்கை

அதிமுக தலைமையை பாஜக ஏற்கும்:நடிகர் ராதாரவி நம்பிக்கை
Updated on
1 min read

கூட்டணியில் அதிமுக தலைமையை பாஜக ஏற்கும் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகருமான ராதாரவி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் ராதாரவி கூறும்போது, "திமுக தலைவர் ஸ்டாலின் முழுமையான தேர்தலை முதல்முறையாக சந்திப்பதால், கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதை தலைமை முடிவு செய்யும். இரட்டை இலை சின்னம் இன்னும் 50 ஆண்டுகள் இருக்கும். தமிழகத்தில் பெரும் புரட்சியை பாஜக ஏற்படுத்தும். அதிமுக தலைமையை பாஜக ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in