

‘பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் சேலம் மாநகராட்சிக்கு மூன்றாம் இடத்திற்கான விருதையும், இந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக தெடாவூர் பேரூராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சென்னையில் புதிய தொழில் நுட்பத்துடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் லைட்ஹவுஸ் குடியிருப்பு திட்டப்பணிக்கு காணொலிகாட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா நேற்று (1-ம் தேதி) நடந்தது.
பாரத பிரதமரின் அனை வருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் சேலம் மாநகராட்சிக்கு மூன்றாம் இடத்திற்கான விருதை யும், இந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக தெடாவூர் பேரூராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. விழாவில் சிறந்த வீடு கட்டியமைக்காக சேலம் மாநகராட்சி, பணங்காடு ஆண்டிப் பட்டி பகுதியை சார்ந்த சித்ரா சரவணன் என்பவருக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா விருது வழங்கி கவுரவித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக, காணொலி காட்சி கூட்டரங்கி லிருந்து காணொலி காட்சியின் வாயிலாக ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியது:
‘பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் சேலம் மாநகராட்சிக்கு மூன்றாம் இடத்துக்கான விருதையும், இந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக தெடாவூர் பேரூராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 22,616 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 12,090 வீடுகள் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வீடுகள் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாநகராட்சி மற்றும் உள்ளுர் திட்டக் குழும பகுதிகளில் மட்டும் 17,706 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 9673 வீடுகள் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள அரசிடம் ஒப்புதல் பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.