

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அரசுத் துறை செயலாளர்கள் பங்கேற் பதில்லை என பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினரும், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவுமான டி.ஆர்.பி.ராஜா தெரிவித் தார்.
இதுதொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் அவர் கூறியதாவது: தஞ்சாவூரில் தமிழ் வளர்ச்சிக் காக உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் போதிய நிதியில்லாமல் தள்ளாடுகிறது. ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களைக்கூட வழங்க முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கும் தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கி றது. நிகழாண்டு அரசு ஒதுக்கிய நிதி ரூ.24 கோடி இன்னும் வரவில்லை. இங்குள்ள பல் வேறு துறைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. குறிப்பாக, கடல் சார் ஆராய்ச்சி துறையால் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில், ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ள நிதித்துறை செயலாளர், உயர்கல்வித் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் போன்ற அரசு அதிகாரம் படைத்தவர்கள் பங்கேற்பதில்லை. 48 பேர் உறுப்பினர் களாக உள்ள நிலையில், டிச.30-ல் நடத்தப்பட்ட ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழக துறைத் தலைவர்கள் போன்ற நிலையில் உள்ள 39 பேர் மட்டுமே பங்கேற்றனர். இவர்களால், எந்தத் திட்டத்தையும் உருவாக்கவோ, செயல்படுத்தவோ முடியாது.
1,000 ஏக்கரில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்தது போக, தற்போது 825 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இந்த நிலத்தை இனி யாருக்கும் ஒதுக்கீடு செய்துகொடுக்காமல் பல்கலைக் கழகத்தின் ஆக்கப்பூர்வ வளர்ச் சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து தமிழ்ப் பல் கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என ஆட்சிக் குழுக் கூட்டத்தில் டி.ஆர்.பி.ராஜா பேசினார். இதுபோன்ற கூட்டங்கள் தஞ் சாவூரில் நடைபெறும்போது அரசுத் துறை செயலாளர்கள் கலந்துகொள்வதில்லை. ஆனாலும், ஒரு மரபுக்காக அவர்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் துணைச் செயலாளர், இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்’’ என்றார்.