

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டம் ஆகியவை, ஏழை எளியமக்களுக்கு கட்டணம் இல்லாமல்மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக மத்திய, மாநிலஅரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் காப்பீடு அட்டை பெறுவதற்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ. 72,000 ) ஆகியவற்றை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுக்கும் மையத்தில் மட்டுமே பதிவு செய்து காப்பீட்டு திட்ட அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களிடம் சிலர் பணம் பெற்றுக்கொண்டு போலியான அடையாள அட்டைகளை வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. இவர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான புகார்களை 1800 4253 993 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். இத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.