தமிழ்நாடு அறிவொளி இயக்கம் சார்பில் எழுத்தறிவை வலியுறுத்தி கடையாணி வீதி நாடகம் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி கிராமத்தில் கடையாணி வீதி நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.
திருப்பத்தூர் அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி கிராமத்தில் கடையாணி வீதி நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.
Updated on
1 min read

திருப்பத்தூர் அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு அறிவொளி இயக்கம் சார்பில் ‘கடையாணி வீதி’ நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து, கற்போம், எழுதுவோம் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட கடையாணி வீதி நாடகத்தை தொடங்கி வைத்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுத்தறிவில்லா தவர்கள் 5 ஆயிரம் பேர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதில், திருப்பத்தூர் வட்டாரத் தில் மட்டும் 1,152 பேர் உள்ளனர். இவர்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்த 52 மையங்களில் தன்னார்வலர் ஆசிரியர்களை கொண்டு எழுத, படிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவொளி இயக் கம் சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து, அதில் வெற்றி யும் கண்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. அந்த அரிய வாய்ப்பினை தவறவிட்ட மூத்த குடிமக்களை அந்தந்த பகுதி இளைஞர்கள் கண்டறிந்து அவர்களுக்கும் கல்வியறிவு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவெங்காயப்பள்ளி கிராமத்தில் மட்டும் 20 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 13 பேர் வந்துள்ளனர். எஞ்சியுள்ள 7 பேரை அவர்களது குடும்பத்தார் படிக்க அனுப்பி வைக்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுப்பிரமணி, மாவட்டத் தலைவர் அச்சுதன், செயலாளர் குணசேகரன், பிடிஓ கோமேதகம் மற்றும் நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in