மாற்றுத்திறனாளிகளுக்குசெல்போன் வழங்கும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்குசெல்போன் வழங்கும் திட்டம்
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘2020-21 நிதியாண் டில் கல்லூரியில் படிக்கும், வேலை வாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பார்வை யற்ற செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று அல்லது கல்லூரி மாணவர்கள் எனில் அதற்கான சான்று, சுய தொழில் புரிபவர்கள் அதற்கான பதிவுச்சான்று, மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் நேரடியாக அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in