

பொன்னமராவதியிலிருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலை யில் தனியார் பேருந்து நேற்று காலை வந்து கொண்டிருந்தது. ஒத்தக்கடை சந்திப்பில் திரும்ப முயன்றபோது, எதிர்திசையில் திருமங்கத்திலிருந்து மேலூர் சென்ற லாரி மோதியது. இதில் தனியார் பஸ் சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பிரபாகரன்(38), அழகேசன்(30), பாக்கியலட்சுமி(37), கருப் பசாமி(60), குருவம்மாள்(31), சின்னம்மாள்(30), மாணிக்கம் (64) உட்பட 25 பேர் காய மடைந்தனர். அனைவரும் மது ரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஊமச்சிகுளம் டிஎஸ்பி விஜ யகுமார், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப் பட்டது. பயணிகள் சிலர் கூறுகை யில், ஒத்தக்கடை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பது தான் விபத்துகளை தவிர்க்க நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்றனர்.