எதிர்க்கட்சிகளின் சதிக்கு விவசாயிகள் துணைபோக கூடாது பாஜக தேசிய துணைத் தலைவர் வினய் வேண்டுகோள்

எதிர்க்கட்சிகளின் சதிக்கு விவசாயிகள் துணைபோக கூடாது பாஜக தேசிய துணைத் தலைவர் வினய் வேண்டுகோள்
Updated on
1 min read

போராட்டத்தைத் தூண்டும் எதிர்க் கட்சிகளின் சதிக்கு விவசாயிகள் துணைபோகக் கூடாது என பாஜக தேசிய துணைத் தலைவர் வினய் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூரில் புதிய வேளாண் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவ சாயிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று உரையாற் றினார். இதில் பாஜக தேசிய துணைத் தலைவர் வினய் பங் கேற்றார்.

முன்னதாக, செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: விவ சாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். அந்த விலை யை விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக விவசாயச் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் இதேபோன்ற விவசாயச் சட்டத்தை நிறை வேற்றுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளித் திருந்தன. எதிர்க்கட்சிகள் செய்ய நினைத்ததை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். இதனால் விவசாயிகள் எதிர்க்கட்சிகளின் சதிக்குத் துணை போகக் கூடாது.

தமிழக அரசு விவசாய நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்றார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகாசுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை மதுரை வந்த வினய், மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை மதுரை மாந கர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் ஹரிஹரன், முத்துகார்த்திக், பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in