

கிராமசபைக் கூட்டங்களை அரசி யல் காரணத்துக்குப் பயன் படுத்தக் கூடாது என அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார்.
மதுரை நெல்பேட்டை, மாடக் குளம் ஆகிய இடங்களில் அம்மா மினிகிளினிக்கை நேற்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் 50 அம்மா மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் 10 கிளினிக் திறக்கப்படுகின்றன. ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை, மாலை 100 டோக்கன்கள் வழங்கப்படும்.
கிராமசபைக் கூட்டங்களை விளம்பரம் மற்றும் அரசியல் காரணத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.