

தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் தலைமை வகித்தனர். தஞ்சாவூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில், ஞானம் நகர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சமுத்திரம் ஏரியில் படகு விட்டு சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். பல இடங்களில் மழைநீர் தேங்குவதால், வடிகால் வசதி செய்துதர வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். பின்னர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு பாடுபட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என முழக்கமிட்டு, ‘அதிமுகவை நிராகரிப்போம்' என அனைவரும் கையெழுத்திட்டனர்.