வாழப்பாடி கூட்டுறவு மையத்தில் ரூ.5.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வாழப்பாடி கூட்டுறவு மையத்தில் ரூ.5.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published on

வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ.5.15 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் பருத்தி ஏல விற்பனையில் முக்கிய இடமாக வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையம் இருந்து வருகிறது. இங்கு சேலம் மட்டுமல்லாது, அண்டை மாவட்ட விவசாயிகளும் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். நடப்பு ஆண்டு ஏல விற்பனை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. அன்று 100 மூட்டைகள் ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனையானது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்துக்கு 231 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.

இதில், டிசிஎச் ரகம் மூட்டைக்கு அதிகபட்சம் ரூ.7,310-க்கும், குறைந்தபட்சம் ரூ.6,369-க்கும், ஆர்சிஎச் ரகம் மூட்டைக்கு அதிகபட்சம் ரூ.5,601-க்கும், குறைந்தபட்சம் ரூ.5,301-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5.15 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in