

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநில சட்டச் செயலாளர் கே.அனந்தராமன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் சிவக் குமார், மாநில துணைத் தலைவர் நாகசுப்பிரமணியன், தென்மண்டலத் தலைவர் திரு ஞானம், மாவட்ட துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெய சீலன், கள்ளர் பள்ளி தலைவர் சின்னபாண்டி, நிர்வாகி கும ரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேர இட ஒதுக்கீடு, பள்ளி திறக்கும் தேதி, குறைக் கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்து உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.கந்தசாமி, செயலாளராக ஏ.கார்மேகம், பொருளாளராக டி.ரமேஷ், அமைப்பு செயலாளராக பி.கு மரேசன் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.