

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமையில் வைக்கப்படும் பெட்டி யில் பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை அளிக் கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், முற்றிலும் குறையும் வரை மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடை பெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுவை, அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டி மூலமாக பெறப்படுகிறது.
தி.மலை மாவட்ட மக்களின் நலன் கருதி, அனைத்து வட்டாட்சி யர் அலுவலகங்களில் வைத்துள்ள, பெட்டி மூலம் மனுக்கள் பெறப் படும். அங்கு வைக்கப்படும் பெட்டி யில், வரும் 14-ம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை, திங்கள்கிழமை தோறும் மனுக் களை பொதுமக்கள் அளிக்கலாம். மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும், tiruvanna malaipetitionbox@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மனுக்களை அனுப்பி வைக்கலாம். மக்களின் நலன் கருதி மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக் கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரி வித்துள்ளார்.