

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சிவகங் கையில் நடந்தது.
மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி முன்னிலை வகித் தார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் பேசினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவப் படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.