தாய், மகன்கள் குண்டர் சட்டத்தில் கைது

தாய், மகன்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள ஆயக்குடி ஓபுளாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சுகுணாதேவி (40), இவர்களது மகன்கள் விஷ்ணுவரதன் (20), விஸ்வேஸ்வரன் (19). இவர்கள் மூவரும் அதே பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் அம்பிகா என்பவரைத் தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியா, ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து சுகுணாதேவி, விஷ்ணுவரதன், விஸ்வேஸ்வரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் மு.விஜய லட்சுமி உத்தரவிட்டார். மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in