

ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே தனியார் வங்கிக் கிளையில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு கடந்த 4-ம் தேதி நள்ளிரவு ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் வந்துள்ளார். அவர், அங்கிருந்த காவலாளி ருத்ரபதி (65) என்பவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றார்.
ஆனால் காவலாளி அந்த நபரைத் தாக்கி விரட்டி விட்டார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைச் சேகரித்து தப்பி யோடிய நபரை பஜார் போலீ ஸார் தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகப் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவலாளியை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.