100 நாள் வேலைத்திட்டம் நிலுவைச் சம்பளம் கோரி திட்ட அலுவலரிடம் மனு

100 நாள் வேலைத்திட்டம் நிலுவைச் சம்பளம் கோரி திட்ட அலுவலரிடம் மனு
Updated on
1 min read

சத்தியமங்கலம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு 4 வாரங்களாக சம்பளம் வழங்கப்படாததையடுத்து, மாவட்ட திட்ட இயக்குநரிடம் முறையீடு செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நடப்பாண்டில், ரூ. 256 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான ஊதியத்தை வேலை செய்த 15 தினங்களுக்குள் வழங்க வேண்டும்.

ஆனால், பணிபுரிந்து 4 வாரங்களைக் கடந்தும், சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக வேலை வழங்காமல், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என வேலை வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த தொழிலாளர்கள் மாவட்ட திட்ட அலுவலர் பாலகணேஷிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட திட்ட அலுவலர், நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கிடவும், அந்தந்த பகுதிகளிலேயே அவர்கள் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பள பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in