

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. 32 பேர் கலந்துகொண்டு மனு கொடுத்தனர்.
“மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு பதில் அளிக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடைபெறும்” என எஸ்பி தெரிவித்தார். ஏடிஎஸ்பி செல்வன், தனிப்பரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.