இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

Published on

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகளிர் தங்கும் விடுதி செயலாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஒய்எம்சிஏ மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர் குரூப் தேர்வுகளுக்கு படிப்பதற்காக தங்கியிருந்தார். மகளிர் விடுதியின் செயலாளராக இருப்பவர் மோசஸ் (62). இவர். அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவது மற்றும் நள்ளிரவில் போன் செய்து தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த இளம்பெண், விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், விடுதி நிர்வாகம் மோசஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் திருப்பத்தூர் எஸ்பி விஜய குமாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, புகார் மனு மீது உடனடியாக விசாரணை நடத்துமாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மோசஸ் தலைமறைவாகி விட்டார். மகளிர் காவல் துறையினர் விசாரணையில், விடுதியில் நடந்த சம்பவம் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் தலைமறைவான மோசஸை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in