

கனமழை காரணமாக திருத் துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ் வரர் கோயில் பிரகாரத்தில் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் வடியும் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தண் ணீர் வடிய வழியில்லாமல் போனது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள்சிவாஜி, துர்கேஷ் உள்ளிட்டோர் நேற்று கோயில் வாசலில் தரையில் நீச்சலடித்து போராட்டம் நடத்தினர்.