கரோனா தடுப்பு பணி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு ரூ.29 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய முதல்வர் கே.பழனிசாமி அருகில் அமைச்சர்கள்  ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், ஜி.பாஸ்கரன், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, முன்னாள் எம்.பி. பிஆர்.செந்தில்நாதன்.
சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய முதல்வர் கே.பழனிசாமி அருகில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், ஜி.பாஸ்கரன், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, முன்னாள் எம்.பி. பிஆர்.செந்தில்நாதன்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு முதல்வர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். பல்வேறு துறைகள் சார்பில் ரூ.27.46 கோடி மதிப்பில் 30 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.36.43 கோடியில் முடிவுற்ற 27 பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து 7,457 பேருக்கு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.29.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பிறகு தொழில் துறையினர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஆலோ சனை நடத்தினார்.

தொல்லியல் துறை, செய்தி-மக்கள் தொடர்புத் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் காட்சியைப் பார்வையிட்டார்.

இவ்விழாவில், கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, நாகராஜன் எம்எல்ஏ, முன்னாள் எம்பியும் சிவகங்கை அதிமுக மாவட்டச் செயலாளருமான பிஆர்.செந்தில் நாதன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in