Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

கிருஷ்ணகிரியில் 580 மையங்களில் கற்போம், எழுதுவோம் இயக்கம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 580 மையங்களில் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி போகனப் பள்ளி ஆதியன் நகரில் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்க மையம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மோகன், சரவணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் நாராயணா, வட்டார கல்வி அலுவலர் மரியரோஸ், மேற்பார்வையாளர் கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கற்போர்கள், தன்னார் வலர்களுக்கு புத்தகங்களை வழங்கி முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள 580 மையங்களில் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த மையங்களில் 580 தன்னார்வலர்கள் மூலம் 11 ஆயிரத்து 488 கற்போர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பொது மக்களுக்கு எழுத்தறிவின் அவசியத்தை உணரும் வகையில் ஊக்கமளித்து, வங்கியின் செயல் பாடுகள், அஞ்சல் நிலைய செயல்பாடுகள், சுயஉதவிக்குழு செயல் பாடுகள் குறித்து அறியச் செய்ய வேண்டும். தன்னம்பிக்கை வளர கற்பது அவசியம்,’’ இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் பேசினார்.

அங்கிருந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகள் சாதிச் சான்றிதழ் இல்லாமல் கல்வியைத் தொடர முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் சரவணன், காட்டிநாயனப்பள்ளி தலைமை யாசிரியர் ஆண்ட்ரி மரிய ஜூலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x