Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

ஜோலார்பேட்டை தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் ரூ.190 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் தொடக்கம் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.190 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரி வித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் திறப்பு விழா, சித்த மருத்துவர் டாக்டர் விக்ரம்குமாரின் ‘கண் டேன் பேரன்பை’ என்ற நூல் வெளியீட்டு விழா, திருப்பத்தூர் மாவட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ‘திருப்பத்தூர் மாவட்டம் ஓர் அறிமுகம்’ மற்றும் படித்துறை புத்தக அறக்கட்டளை சார்பில் 12 நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மேற்கண்ட நூல்களை வெளியிட ஆட்சியர் சிவன் அருள் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘திருப்பத்தூர் புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஓராண் டில் அனைத்து அலுவல கங்களும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் எளிதில் மாவட்ட நிர்வாகத்தை அணுகுவதுடன், கடந்த காலங்களில் ஏற்பட்ட கால தாமதங்கள் இல்லாமல் விரை வாக தீர்வு பெறும் வகையில் பயன்பெற்று வருகின்றனர்.

இதில் சோதனையான கால கட்டமாக கரோனா வைரஸ் தொற்றில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட மக்களை பாதுகாத்து மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் தொற்று குறைவாக உள்ள மாவட்டம் என்ற பெருமையையும் திருப்பத்தூர் மாவட்டம் பெற்றுள்ளது. அண்டை மாவட்டங்களில் எல்லாம் திருப்பத்தூர் மாவட்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் செயல் பட்டு வருவது மாவட்ட நிர் வாகத்தின் திறமையை வெளிப் படுத்துகிறது.

இந்த பணிகளில் அனை வரையும் இணைத்து நடவடிக் கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக் கிறேன். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதனை, தொடர்ந்து ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் ரூ.190 கோடியில் செயல் படுத்தப்பட உள்ளது. பின்னர், இது மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

வாணியம்பாடி ஊத்தங்கரை சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது பணி ஒப்பந் தம் முடிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கர்நாடக மாநில வணிகவரித்துறை துணை ஆணையர் சக்திவேல், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் குணசேகரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சுசிகண்ணம்மா, சித்த மருத்துவர் டாக்டர் விக்ரம்குமார், தமிழ்செம்மல் முனைவர் சிவராஜி, படித்துறை புத்தக அறக்கட்டளை தலைவர் இளம்பருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x