உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி கைதைக் கண்டித்து புவனகிரியில் திமுக எம்எல்ஏ சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதயநிதி கைதைக் கண்டித்து புவனகிரியில் திமுக எம்எல்ஏ சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டார். அவருடன் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மற்றம் நிர்வாகிகள் பங்கேற்றனர். கரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு மாறாக கூட்டம் கூட்டியதாக உதயநிதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் திமுகவினர் கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு உட்பட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

புவனகிரி பாலம் அருகே எம்எல்ஏ சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இது போல நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு எம்எல்ஏ சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். 14 இடங்களிலும் மொத்தமாக திமுகவினர் 535 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in