திருத்துறைப்பூண்டியில் ஊராட்சிதோறும் பேரிடர் மீட்புக் குழு அமைக்க முடிவு

திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சித் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்.
திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சித் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள, வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படுகின்ற பகுதியாக திருத்துறைப்பூண்டி ஒன்றியம் உள்ளது. இதையடுத்து, இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தக் கூட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் பாஸ்கர் வரவேற்றார்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஓரிரு நாட்களில் பேரிடர் மீட்புக் குழுவை அமைக்க வேண்டும். 1986-87-ல் கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளில் வசிக்கும் அனைவரையும் பாதுகாப்பான முகாம்களில் குடியேற அறிவுறுத்த வேண்டும். மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளைக் கண்டறிந்து, அதில் குடியிருப்பவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, கழிப்பிடம், ஜெனரேட்டர் வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், வாசுதேவன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் 32 ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in