Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. சென்னை, அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் முடிவு நாளை (நவ.23) அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள், வழக்குகளை சந்தித்து வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனி அலுவலர் நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் உள்ள நிர்வாகிகள் யாரும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் பி.எல்.தேனப்பன் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x