

தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த இரு நாட்களாக ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் மலர் சந்தையில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் மலர் சந்தையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த இரு நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் பூக்களின் தேவை அதிகரித்ததால், அதிக விலைக்கு விற்பனையானது.
சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1200 முதல் ரூ.1500 வரையிலும், கனகாம்பரம் ரூ.1200-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடான் ரூ.1000-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், செண்டுமல்லி ரூ.80-க்கும் விற்பனையானது.
ஈரோடு மலர் சந்தையில் கடந்த வாரம் மல்லிகைப் பூ கிலோ ரூ. 200-க்கு விற்பனையான நிலையில், நேற்று கிலோ ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. முல்லைப்பூ ரூ.1200-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும் விற்பனையானது.