Regional03
மன்னார்குடிக்கு வந்த முதல் சரக்கு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மன்னார்குடிக்கு முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டிட்டாக்கர் எனும் இடத்தி லிருந்து நவ.10-ம் தேதி 33 சரக்கு ரயில் பெட்டிகளுடன் சாக்கு பண்டல்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் நேற்று மன்னார்குடி ரயில் நிலையம் வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து, முதன் முறையாக மன்னார்குடிக்கு வந்த சரக்கு ரயிலுக்கு மன்னார் குடி வட்ட லாரி உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டு, உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந் ததாரர் மற்றும் மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
