கருங்காலக்குடியில் மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

கருங்காலக்குடியில் மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்
Updated on
1 min read

மதுரை-திருச்சி நான்குவழிச் சாலையில் கருங்காலக்குடியில் ரூ.19 கோடியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் நான்குவழிச் சாலையைக் கடக்கும்போது ஏற்படும் விபத்தைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இது குறித்து கடிதம் மூலமும் நேரடியாகவும் மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். கடந்த ஜனவரியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து விபத்தைத் தவிர்க்க மேம்பாலம் தேவை என ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத் தினேன்.

இந்நிலையில், நவ.6-ல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுப்பிய பதிலில் கருங்காலக்குடியில் மேம்பாலம், சுரங்கப்பாதை விரைவில் அமைக்கப்படும் என்றும் இதற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி நேரத்தில் மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மேலூர் தொகுதி மக்களுக்கான பரிசு மட்டுமல்ல; மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் கிடைத்த பரிசாகக் கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in