

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஹார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் மற்ற மாநில இடைத்தேர்தல் வெற்றிகள் பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் அளித்து வரும் வரவேற்புக்கு எடுத்துக்காட்டு. அதர்மத்தை அழிக்கும் முருகப் பெருமானின் வேலைக் கண்டு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சுகின்றனர். நீதிமன்ற அறிவிப்பின்படி வேல் யாத்திரை தொடங்கி டிசம்பர் 6-ல் திருச்செந்தூரில் நிறைவுபெறும். அப்போது தீய சக்திகள் ஒழியும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் உரிய முடிவெடுப்பார். இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.
தமிழகத்தில் எந்தவொரு திட்டமும் வரக்கூடாது என்பதற் காகவே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடு கின்றனர் என்றார் அவர்.
பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஆர்.டி.செந்தில்வேல் உடனிருந்தார்.
நீதிமன்ற அறிவிப்பின்படி வேல் யாத்திரை தொடங்கி டிசம்பர் 6-ல் திருச்செந்தூரில் நிறைவுபெறும். அப்போது தீய சக்திகள் ஒழியும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் உரிய முடிவெடுப்பார்.