

மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கருஞ் சட்டை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மதுரையில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மதுரை அண்ணா நகரில், தமிழக மக்கள் முன் னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
ஏழு உட்பிரிவுகளை ஒருங் கிணைத்து தேவேந்திரகுல வேளா ளர் என அரசாணை வெளியிடு மாறு தொடர்ந்து போராடி வரு கிறோம். இது தொடர்பாக பிரதமர், தமிழக முதல்வரிடம் நேரடியாகப் பேசியுள்ளோம். தமிழக முதல்வர் விரைவில் அரசாணை வெளியிடுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். கட்டாயம் நிறைவேற்றுவார் என நம்புவோம்.
அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டால் தை 1-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாட்டு வண்டி ஊர்வலம் நடத்து வோம் என்றார்.
இதில், மாநில துணைப் பொதுச் செயலாளர் நெல்லையப்பன், மதுரை மாவட்டச் செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் முனியாண்டி, ஜோதிபாஸ், சுப.சுந்தரபாண்டி யன், தாமரைமுத்துப்பாண்டி, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தில்லைரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.