நல வாரியங்களில் பதிவு செய்ய புதிய வசதி

நல வாரியங்களில்  பதிவு செய்ய புதிய வசதி
Updated on
1 min read

இணையதளம் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் புதிய பதிவு, புத்துப் பித்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப் பட்டு, உறுப்பினர்களாக தொழி லாளர் கள் சேர்க்கப்பட்டு வரு கிறார்கள். அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து ஊனம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, நல வாரியங்களில் புதியதாக பதிவு செய்யவும், ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும் www.tnuwwb.in என்ற இணையதளம் மூலம் சேவை வழங்கப்படுகிறது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா உட்பட 16 நல வாரியங்களில் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in