விழுப்புரம் மாவட்டத்தில் 51 இடங்களில் இன்று திமுக தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் காணொலியில் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

விழுப்புரம் மாவட்டத்தில் 51 இடங்களில் இன்று   திமுக தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் காணொலியில் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
Updated on
1 min read

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது:

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று (நவ.10) மாலை காணொலி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற தேர்தல் சிறப்புப்பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள், 6 பேரூராட்சிகள், விழுப்புரம் நகரில் 10 இடங்கள் மற்றும் மாவட்ட திமுகஅலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. மத்திய மாவட்டத்தில் உள்ள திமுக முன்னோடிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் என 110 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி மற்றும் கேடயம் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வழங்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடிஉள்ளிட்டோர் கலந்துகொள்கின் றனர் என்று தெரிவித்தார். மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனக ராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று (நவ.10) மாலை 4 மணி அளவில் காணொலி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், திண்டிவனம் நகராட்சியில் 2 இடங்கள், செஞ்சி பேரூராட்சியில் 2 இடங்கள் என 20 திருமண மண்டபங்களில் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

தொகுதிக்கு 100 திமுகவினர் வீதம் 3 தொகுதிகளுக்கு 300 திமுகவினருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in