

தென்மண்டல ஐஜி முருகன் உத்தரவின்பேரில் சுந்தரராஜபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு டிஎஸ்பி நாகசங்கர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில், வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களும், அவர்கள் சார்ந்த வழக்கறிஞர்களும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது. மேலும், பொதுமக்களின் பிரச்சினைகள் சிறப்புத் தீர்வுக் கூட்டம் மூலம் எளிதாக உயர் அதிகாரிகள் அனைவரையும் சந்திக்க வாய்ப்புக் கிடைப்பதால் பல வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டதாக டிஎஸ்பி நாகசங்கர் தெரிவித்தார்.