அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read

அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி அரசு சிறப்பித்து வருகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டு திரு வள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையத்திலிருந்து இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று தங்களைப் பற்றிய முழுவிவரங் களுடன் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அறை எண் 26-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in