முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த இசைக்குழுவினர்.
முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த இசைக்குழுவினர்.

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

Published on

முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்வரவேற்பு உட்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவந்தன. அதன்படி, நேற்று பிற்பகல் திருப்பூர் வந்த முதல்வர் பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்ட எல்லை தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர்எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேர வைத் தொகுதி உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என் விஜயகுமார், ஏ.நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். ஆட்சியர் அலுவலகம் வரும் வரை 15-க்கும்மேற்பட்ட இடங்களில் அமைக் கப்பட்டிருந்த வரவேற்பு மையங்களில் மேள, தாளங்கள் முழங்க பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

முதல்வரின் வருகையால் அவிநாசி சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in