Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

ரேஷன் கடைகளில் காய்கறி வழங்கக்கோரி ஒப்பாரி போராட்டம்

ரேஷன் கடைகளில் பண்டிகை பஜார் ஏற்படுத்தி அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.தேவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மக்களின் துயரை விளக்கும் வகையில் ஒப்பாரி வைத்து கோரிக்கை விளக்கமளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இ.அலமேலு, பொருளாளர் என்.தனலட்சுமி, துணைத் தலைவர் ஏ.சக்தி, நகர செயலாளர் வீ.சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவல கம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நீலா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் கீதா, மாவட்ட செயலாளர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x