Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

பல்நோக்கு அரங்கப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் தொங்கும் பூங்கா வளாகம் மற்றும் கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல் நோக்கு அரங்குகளை மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம் தொங்கும் பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் பல்நோக்கு அரங்கில், 1,000 பேர்கள் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம் மற்றும் மைய அரங்க கட்டிடத்தின் முதல் தளத்தில் முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய குளியல் அறைகள் இணைக்கப்பட்ட 7 தனி அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், இங்கு 440 பேர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய உணவருந்தும் அரங்கம் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கான பிரத்யேக உணவு அருந்தும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி மற்றும் நவீன கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கோட்டை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.5.85 கோடி மதிப்பில் 600 பேர் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கமும், 200 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாபூங்கா, கோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் மொத்தம் ரூ.16.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x