

நாமக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் சித்ரா, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன காசநோய் கண்டுபிடிப்பு கருவி பயன்பாடு, ரூ.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட 6 சவப்பெட்டிகள் கொண்ட சவக்கிடங்கு ஆகிய வற்றை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி கூறுகையில், நவீன காசநோய் கண்டுபிடிப்பு கருவியில் 2 மணி நேரத்தில் நோய் துல்லியமாக கண்டுபிடிக்கலாம். காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், குறைந்த அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை நாமக்கல் அரசு மருத்துவமனை சென்றுதான் நோய் தாக்கம் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.
தற்போது குமாரபாளையம் அரசு மருத்துவமனையிலேயே மூலக்கூறு முறையில் கண்டுபிடிக்கலாம், என்றார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.